வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானம் மற்றும் சம்பந்தர், சுமந்திரன் ஆகியோரை கைவிட்டு கூட்டமைப்பினை பதிவு செய்யும் முயற்சிகள் மத்தியில் அவற்றிற்கு எதிரான காய்நகர்த்தல்களை இந்தியா ஆரம்பித்துள்ளது.

405

 

வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானம் மற்றும் சம்பந்தர், சுமந்திரன் ஆகியோரை கைவிட்டு கூட்டமைப்பினை பதிவு செய்யும் முயற்சிகள் மத்தியில் அவற்றிற்கு எதிரான காய்நகர்த்தல்களை இந்தியா ஆரம்பித்துள்ளது.பதிவு இணைய செய்தி

இது தொடர்பில் கண்டியில் உள்ள துணைதூதுரகத்தில் இரகசிய மாநாடொன்று நடத்தப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. ஈபிடிபி தலைமை மற்றும் கூட்டணியின் ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எவ் வரதர் அணியினருடன் புளொட் சித்தார்த்தன் ஆகியோர் இம்மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.

மாநாட்டில் யாழ்.துணைத் தூதுவராலயத்தைச் சேர்ந்த இரண்டு றோ அதிகாரிகளும் அதே போன்று கொழும்பு தலைமையகத்தை சேர்ந்த றோ அதிகாரிகளும் பங்கெடுத்ததாகத் தெரியவருகின்றது.

கூட்டமைப்பினுள் ஆனந்தசங்கரி மற்றும் சித்தார்த்தனைக் கொண்டுவருவதில் இந்திய றோ அதிகாரிகளே முன்னின்றிருந்தனர். எனினும் சித்தார்த்தன் மாகாணசபை தேர்தல் மூலம் வெற்றிபெற்றுள்ளதுடன் அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கனவிலிருந்து வருகின்றார். எனினும் சங்கரி மட்டும் தேர்தல் தோல்விகளுடன் முரண்பட்டு வெளியேறியிருந்தார்.பதிவு இணைய செய்தி

அதே போன்று ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணியினரும் கூட்டமைப்புடன் இணைந்து கொள்ள விருப்பம் கொண்டுள்ள போதும் சுரேஸ் பிரேமச்சந்திரன் அதற்கு முட்டுக்கட்டை போட்டுவருகின்றார்.

இந்நிலையில் முரண்படுகின்ற தரப்புக்களை பலவீனப்படுத்த ஏதுவாக றோ முயற்சிகளை ஆரம்பித்துள்ளது. அதற்கு வெளியிலுள்ள தரப்புக்களை அழைத்து கூட்டமைப்பினுள் கொண்டு செல்ல முயற்சிகள் ஆரம்பித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக இதுவரை முரண்பட்டுக் கொண்டிருந்த டக்ளஸ்-ஆனந்தசங்கரி உறவு வலுத்துள்ளது.

ஆனந்த சங்கரியின் சகோதரர் ஒருவர் இயற்கை மரணமெய்தியுள்ள நிலையில் அவரது இறுதிக் கிரியைகள் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.பதிவு இணைய செய்தி

இறுதி நிகழ்வில் கலந்து அஞ்சலி செலுத்திய டக்ளஸ் மற்றும் சந்திரகுமார் தரப்பு சங்கரிக்கு ஆறுதல் தெரிவித்துமுள்ளது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

SHARE