தேசிய நிறைவேற்றுக் குழு அரசியலமைப்பு ரீதியாக அதிகாரமற்றதாக இருந்தாலும், தற்போதைய அரசாங்கத்தின் 100 நாள் செயற்திட்டம் தொடர்பாக முடிவுகளை எடுக்கும் குழுவாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

431

 

தேசிய நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில், முக்கியமான அரசியல் தலைவர்கள் பங்கேற்காததால், தமிழர் பிரச்சினை குறித்து கடந்த வாரம் விவாதிக்கப்படவில்லை என்று, குழுவின் உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தேசிய நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் ஆகியோர் பங்கேற்கவில்லை. இதனால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடந்த கூட்டத்தில், தமிழர் விவகாரம் தவிர்ந்த ஏனைய பிரச்சினைகள் குறித்தே விவாதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தேசிய நிறைவேற்றுக் குழுக் கூட்டம் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட போதும், இரண்டொரு வாரங்களிலேயே அந்த அட்டவணையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தக் கூட்டம் ஒழுங்கின்றி நடத்தப்பட்டு வருவதாக தனது பெயரை வெளியிட விரும்பாத உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். தேசிய நிறைவேற்றுக் குழு அரசியலமைப்பு ரீதியாக அதிகாரமற்றதாக இருந்தாலும், தற்போதைய அரசாங்கத்தின் 100 நாள் செயற்திட்டம் தொடர்பாக முடிவுகளை எடுக்கும் குழுவாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.N E C

y

 

 

SHARE