அடுத்த போட்டியிலும் ஆஸ்திரேலிய வீரர் பால்க்னர் விளையாடமாட்டார்

419
உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கடந்த சனிக்கிழமை நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் பால்க்னர் களம் இறங்கவில்லை. 24 வயதான பவுல்க்னெர் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வருகிறார். காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் வருகிற 21-ந்  திகதி பிரிஸ்பேனில் நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது.

இந்த ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில் விரைவில் களம் திரும்புவேன் என்று பால்க்னர் தெரிவித்துள்ளார்.

SHARE