ஹன்சிகா குளியல் காட்சி: நெட்டில் மீண்டும் பரபரப்பு 

736




சமீபத்தில் நடிகை ராதிகா ஆப்தேவின் குளியல் காட்சி படங்கள் இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் அது தன்னுடைய படம் அல்ல. அவை மார்பிங் செய்த படங்கள் என ராதிகா மறுத்திருந்தார்.இந்நிலையில் நடிகை ஹன்சிகா பாத்ரூமில் டாப்லெஸில் குளிக்கும் காட்சி வீடியோ வெளியாகி இருப்பதாக பரபரப்பாகி உள்ளது. ஹன்சிகாவின் குளியல் காட்சி படமும் யாரோ சிலரால் கிராபிக்ஸில் வேலை செய்து இணைய தளங்களில் பரப்பிவிட்டிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. இது ஹன்சிகாவின் புகழை கெடுக்க யாரோ செய்திருக்கும் சதி வேலை எனவும், வக்கிர மனம்படைத்த தொழில்நுட்பம் தெரிந்த சிலர் விரைவில் சம்பாதிப்பதற்காக இதுபோன்ற போலி படங்களை உருவாக்கி வெளியிடுவதாகவும் அவரது தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கலாமா என்று கூட ஹன்சிகாவின் அம்மா தீவிரமாக யோசிக்கிறாராம். ஆனால் புகார் கொடுத்தால் இந்த ஆபாச படத்தின் மீது ரசிகர்களுக்கு மேலும் கவனம் செல்லும். இது ஹன்சிகாவின் படங்கள் எனக்கூறி சிலர் பரப்புவார்கள். தேவையில்லாத நெகட்டிவ் பப்ளிசிட்டி வேண்டாம் என ஹன்சியின் சினிமா நண்பர்கள் அறிவுரை கூறியுள்ளார்கள். அதன்படியே அமைதி காக்க ஹன்சிகாவும் முடிவு செய்துள்ளாராம்.

 

SHARE