இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் இலங்கைத் தூதுக்குழுவையும் வரவேற்கும் நிகழ்வு இந்திய ஜனாதிபதி மாளிகையான ராஸ்ட்ரபதி பவனில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது. ராஸ்ட்ரபதி பவனுக்குச் சென்ற சனாதிபதியையும் இலங்கை தூதுக்குழுவையும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி யும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் வரவேற்றார்கள்.
இதன்போது இராணுவ மரியாதை அணிவகுப்பும் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து இந்திய ஜனாதிபதி யும் இலங்கை ஜனாதிபதியும் சினேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்கள். இந்திய வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு மகாத்மா காந்தியின் கல்லறைக்கு அஞ்சலி