வெங்கட் பிரபு இயக்கத்தில், சூர்யா நடித்து கொண்டிருக்கும் படம் மாஸ். இப்படம் இந்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளிவரும் என கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று இப்படம் 3டி தொழில் நுட்பத்தில் வெளிவரும் என ஒரு செய்தி பரவி வந்தது. ஆனால், இதை வெங்கட் பிரபு மறுத்துள்ளார்.
3டி தொழில் நுட்பத்தில் எடுப்பது மிகவும் கஷ்டம், மாஸ் திரைப்படத்தை அப்படி எடுக்கும் எண்ணம் இல்லை என தன் டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.