வவுனியாவில் வடக்கு மாகாணசபையின் வெள்ள நிவாரணப் பணிகள் .

360

 

நாட்டில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும்மழை காரணமாக மேன்மேலும் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். இவ்வாறு இடம்பெயர்ந்து ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் பொதுமண்டபங்களிலும் தங்கியிருப்பவர்களுக்கு வடக்கு மாகாணசபையால் மாவட்டம் தோறும் துரிதகதியில் நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 10624587_1607965916099402_5136212350383915943_n 10885174_1607965889432738_6677006064836847696_n 10891863_1607965942766066_6262173802471642572_n 10898159_1607965926099401_5838227943520491807_n 10898195_1607965939432733_1587339944932870088_n 10898248_1607965912766069_2028691796743690183_n

வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமை (28.12.2014) வடக்குமாகாண விவசாய அமைச்சின் உணவு வழங்கும் துறையும் சுகாதார அமைச்சும் இணைந்து உலர்உணவுப் பொதிகளையும் குழந்தைப்பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கான அத்தியாவசியப் பொருட்களையும் விநியோகித்துள்ளன.

வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோரின் நேரடி மேற்பார்வையின்கீழ் நடைபெற்ற நிவாரணப்பணிகளில் வடமாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன், எம்.தியாகராசா, இ.இந்திரராசா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

முதற்கட்டமாக புதியவேலர் சின்னக்குளம், வேடர்மகிழங்குளம், விளக்குவைத்தகுளம், மாதர் மாணிக்கர் மகிழங்குளம், கொந்தக்காரன்குளம், கதிரவேலர்பூவரசன்குளம், ஓமந்தை அரசன்குளம் ஆகிய இடங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளமை வவுனியா மாவட்டத்தின் ஏனைய இடங்களில் இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கும் உதவிகள் விநியோகிக்கும் பணிகள் தொடாந்து இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE