கலங்கடிக்கும் முரளிதரன்.. கதறடிக்கும் சச்சின்: காணாமல் போன ஜாம்பவான்கள்

464

 

 

நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் சில முக்கியமான வீரர்களின் பங்களிப்பு இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

சச்சின் டெண்டுல்கர்

இந்திய அணி இந்த உலகக்கிண்ணத் தொடரில் சச்சின் டெண்டுல்கர் இல்லாமல் களமிறங்கி விளையாடி வருகிறது. கிரிக்கெட் துறையில் பல சாதனைகளை படைத்த சச்சின், இளம் வீரர்களுக்கும் முன்னோடியாக திகழ்கிறார்.

ஷேவாக்

தனி ஆளாக போட்டியின் முடிவை மாற்றும் திறன் படைத்த அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக்கை இந்த உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய அணி இழந்துள்ளது.

ரிக்கி பொண்டிங்

அவுஸ்திரேலிய அணியின் சிறந்த அணித்தலைவர், அதிக ஓட்டங்களை குவித்தவர், அதிக பிடிகளை எடுத்தவர் என சாதனை படைத்த ரிக்கி பொண்டிங் இல்லாமல் அவுஸ்திரேலிய அணி இந்த உலகக்கிண்ண தொடரில் விளையாடி வருகிறது.

கிரேம் ஸ்மித்

தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் மற்றும் சிறந்த அணித்தலைவரான கிரேம் ஸ்மித் இல்லாமல் தென் ஆப்பிரிக்க அணி இந்த உலகக்கிண்ணத் தொடரில் கலந்து கொண்டுள்ளது.

காலிஸ்

சிறந்த சகலதுறை வீரராக இருக்கும் காலிஸையும் தென் ஆப்பிரிக்கா இந்த உலகக்கிண்ணத்தில் இழந்துள்ளது. பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் மிரட்டும் காலிஸ் அதிக ஓட்டங்கள் எடுத்து வீரர்கள் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார்.

சந்தர்பால்

பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியின் அசத்தல் ஆட்டக்காரர் சந்தர்பாலை அந்த அணி இந்த உலகக்கிண்ண தொடரில் தவறவிட்டுள்ளது.

யுவராஜ்

கடந்த உலகக்கிண்ணத் தொடரில் தொடர் ஆட்டநாயகன் விருது வென்ற அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் இல்லாமல் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது.

ஜேக்கப் ஓரம்

உலகக்கிண்ணத் தொடரில் சிறந்த பந்துவீச்சாளராக வலம் வந்தவர் நியூசிலாந்தின் ஜேக்கப் ஓரம். களத்தடுப்பிலும் அசத்தும் ஓரம் இல்லாமல் நியூசிலாந்து அணி இந்த உலகக்கிண்ணத்தில் விளையாடி வருகிறது.

பிரட்லீ

மின்னல் வேகப்பந்து வீச்சாளர் பிரட்லீ இல்லாமல் அவுஸ்திரேலிய அணி இந்த உலகக்கிண்ணத் தொடரை விளையாடி வருகிறது. உலகக்கிண்ணத்தில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையிலும் இடம் பிடித்துள்ளார்.

முத்தையா முரளிதரன்

தனது சுழற்பந்தால் எதிரணியை கலங்கடிக்கும் ஜாம்பவான் முத்தையா முரளிதரனை இலங்கை அணி இந்த உலகக்கிண்ணத்தில் தவறவிட்டுள்ளது. இவர் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

SHARE