ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 8வது லீக் போட்டியில் ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின.
நெல்சனில் நகரில் நடந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்வே அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 285 ஓட்டங்கள் எடுத்தது.
அதிரடியாக ஆடிய சய்மான் அன்வர் 67 ஓட்டங்களையும், குராம் கான் 45 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர். மற்ற வீரர்களும் இரட்டை இலக்க ஓட்டங்களை குவிக்க சற்று கடின இலக்கை ஜிம்பாப்வே அணிக்கு நிர்ணயித்தது.
ஜிம்பாவே தரப்பில், சாட்டாரா 3 விக்கெட்டையும், மியர், வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் 286 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 48 ஓவர்களிலே 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. இதனால் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த அணியில் வில்லியம்ஸ் ஆட்டமிழக்காமல் 76 ஓட்டங்களையும், டெய்லர் 47 ஓட்டங்களையும், ஷாகாப்வா 35 ஓட்டங்களையும், ஷிக்கந்தர் 46 ஓட்டங்களையும், எர்வின் 42 ஓட்டங்களையும் எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தனர்.
பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் என அசத்திய ஜிம்பாப்வே வீரர் சீன் வில்லியம்ஸ் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.