ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுலின் வடக்கு பகுதியில் உள்ள பஞ்ச்ஷிர் மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. மலைப்பாங்கான இந்த பகுதியில் சுழற்றி அடித்த சூறைக்காற்றின் விளைவாக இன்று திடீரென பனிச்சரிவும் ஏற்பட்டது.

413

இந்த பனிச்சரிவில் சிக்கி பஞ்ச்ஷீர் மற்றும் பாமியான் மாகாணங்களை சேர்ந்த 30-க்கும் அதிகமானோர் பேர் உயிருடன் புதைந்து இறந்து விட்டதாகவும், பனிக்குவியலில் சிக்கியிருக்கும் மேலும் சிலரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பஞ்ச்ஷீர் மாகாண கவர்னர் அப்துல் ரஹ்மான் கபிரி அறிவித்துள்ளார். 

மீட்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என உள்ளூர் ஊடகங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.

SHARE