தமிழர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் ஐ.நா நிறுவனம் – கனடாவில் புதிய திருப்பம்

344
தமிழர்களின் முன்னெடுப்பான நிகழ்வுகள் இன்று கனடாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. எனவே அவர்களினால் ஏற்படுத்தப்பட்ட கனடிய மனிதவுரிமை மையத்துடன் இணைந்து பணியாற்ற ஐக்கியநாடுகள் அவையின் அமைப்புக்கள் விரும்பம் தெரிவித்துள்ளன.

அதன் முன்மாதிரியான நிகழ்வாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பெண்கள் பிரிவின் கனடாக் கிளை கனடிய மனிதவுரிமை மையத்துடன் [CHRV] இணைந்து 2015ல் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளது.

சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டு ஒன்றாரியோ சட்டசபையில் கனடிய மனிதவுரிமை மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் 22 அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளும், 16ற்கு மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும், பற்றிக் பிரவுன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அத்தோடு இந்நிகழ்வில் கனடியப் பாதுகாப்பு அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர். அமெரிக்கத் தூதரகத்தின் சார்பில் அங்கு உயர் பணியாற்றும் தமிழரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

தமிழர்களின் தலைமைத்துவத்தில் உருவாக்கப்பட்ட கனடிய மனிதவுரிமை மையமானது [www.chrv.ca ] சர்வ இனங்களையும் மதங்களையும் உள்வாங்கிய நிகழ்வுகளை உள்வாங்கியதாக நடத்தி வருவதோடு, பல்லினக் கலாச்சாரத்தை கனடாவில் மேன்மைப்படுத்தும் அமைப்பாகவும் திகழந்து வருகின்றது.

சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்ட பல்லின அமைப்புக்களின் பிரதிநிதிகளின் கருத்தாலோனையின் படியும், கனடிய மனிதவுரிமை மையத்தின் நேர்மையான செயற்பாட்டின் வெளிப்பாடகவும் ஐக்கிய நாடுகளவையின் பெண்கள் அமைப்பின் கனடாக் கிளை இந்த அமைப்புடன் இணைந்து திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

SHARE