தூக்கத்தில் மரணத்தை தழுவிய 80 விவசாயிகள்

379
நைஜீரியாவில் விவசாயிகள் மீது பழங்குடியினர் நடத்திய தாக்குதலில் 80 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நைஜீரியாவின் பேணு(Benue) மாநிலத்தில் உள்ள அகட்டு(Agatu) கிராமத்தில் நேற்று அதிகாலை விவசாயிகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது துப்பாக்கி மற்றும் கொடூர ஆயுதங்களுடன் கிராமத்திற்குள் நுழைந்த பழங்குடியின கால்நடை மேய்ப்பாளர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் தூங்கிக்கொண்டிருந்த அப்பாவி விவசாயிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்தாண்டு நடத்தப்பட்ட தாக்குதலால் அக்கிராமங்களை விட்டு வெளியேறிய விவசாயிகள், மீண்டும் வந்து விவசாய பணிகளை மேற்கொள்ள தொடங்கியதால், இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வெளியான செய்தியில், விவசாயம் செய்வதற்காக அதிகளவு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால் கால்நடைகள் மேய்ப்பதற்கான இடப் பற்றாக்குறை ஏற்படுகிறது என்றும் இதுதான் பழங்குடியினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுவதற்கான முக்கிய காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE