ஜேர்மனியில் விமானங்கள் ஓடாது – போராட்டதில் குதித்த விமானிகள்

341
ஜேர்மனிய விமானிகளுக்கு நிர்ணயித்துள்ள பணி ஓய்வு காலம் மற்றும் ஓய்வூதிய தொகையை எதிர்த்து விமானிகள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.தற்போது, ஜேர்மனிய விமானிகள் சட்டரீதியாக உள்ள 65 வயதிற்கு முன்னதாகவே 55 வயதிலே பணியிலிருந்து ஓய்வு பெறலாம் . மேலும் 65 வயது வரை சுமார் 60 சதவிகிதம் ஓய்வூதியம் பெறலாம்.இது தொடர்பாக ஜேர்மனி விமானிகளின் சங்கமான Cockpit வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானிகள் பணியிலிருந்து ஓய்வு பெறும் காலத்தை நீடிக்க வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால் நாளை (புதன் கிழமை) முழுவதும் Lufthansa விமான சேவை பெருமளவில் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.ஆனால், Lufthansa விமான சேவைகள் பாதிக்கப்பட்டாலும், மற்ற ஜேர்மனிய விமானங்களான Germanwings மற்றும் Eurowings சேவைகளில் பாதிப்பு இருக்காது என Cockpit தெரிவித்துள்ளது.விமானிகளின் போராட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள Lufthansa நிறுவனம், வேலை நிறுத்தம் ஏற்பட்டால் Germanwings மற்றும் Eurowings விமான சேவைகளிலும் பாதிப்பு ஏற்படும்.

இருப்பினும், வேலை நிறுத்தம் நடந்தாலும் கூட தனது நிறுவனத்தை சேர்ந்த மூன்றில் இரண்டு சதவிகித விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், அவசியம் ஏற்படும் பட்சத்தில் ஏற்கனவே முன் பதிவு செய்திருந்த பயணிகளை பிற நிறுவன விமானங்கள் மூலம் அனுப்பி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என Lufthansa தெரிவித்துள்ளது.

 

SHARE