நாக்- அவுட்’ சுற்றும்.. அதிர்ஷ்டமில்லா தென்ஆப்பிரிக்காவும்..

347
உலகக்கிண்ணத் தொடரில் எதிரணியை மிரட்டியெடுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு `நாக்- அவுட்’ சுற்று என்றாலே அதிர்ஷ்டம் கைகொடுப்பதில்லை.லீக் சுற்றில் அசத்தினாலும் உலகக்கிண்ண வரலாற்றை திருப்பி பார்த்தால் தென் ஆப்பிரிக்காவுக்கும், நாக்- அவுட் சுற்றுக்கும் ஏழாம் பொருத்தம் தான்.

1992-ம் ஆண்டு முதல் உலகக்கிண்ணத்தில் விளையாடி வரும் தென்ஆப்பிரிக்க அணி 2003-ம் ஆண்டை (முதல் சுற்றுடன் வெளியேற்றம்) தவிர்த்து எஞ்சிய 5 முறை நாக்- அவுட் சுற்றில் தோற்று இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

1992-ம் ஆண்டு உலகக்கிண்ணம்:-

1992-ம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடரில் லீக் சுற்றை தாண்டி அரையிறுதியை எட்டிய தென் ஆப்பிரிக்கா அரையிறுதியில் இங்கிலாந்தை சந்தித்தது.

முதலில் விளையாடிய இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 252 ஓட்டங்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா துடுப்பெடுத்தாட சென்ற போது, மழை எமனாக வந்தது.

13 பந்துகளில் 21 ஓட்டங்கள் தேவையாக இருந்த சூழலில், மழை குறுக்கிட்டதால் சர்ச்சைக்குரிய மழைவிதிப்படி ஒரு பந்தில் 21 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றப்பட்டதால், கண்ணீரோடு தென்ஆப்பிரிக்கா (232-6) வெளியேறியது.

1996-ம் ஆண்டு உலகக்கிண்ணம்:-

1996-ம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடரின் லீக் சுற்றில் 5 அணிகளையும் பந்தாடிய தென்ஆப்பிரிக்கா காலிறுதியில் மேற்கிந்திய தீவுகளிடம் உதை வாங்கியது.

லாராவின் (111 ஓட்டங்கள்) சதத்தின் உதவியுடன் மேறகிந்திய தீவுகள் நிர்ணயித்த 265 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்கா 245 ஓட்டங்களில் சுருண்டது.

1999-ம் ஆண்டு உலகக்கிண்ணம்:-

1999-ம் ஆண்டு உலகக்கிண்ணத்தில், சூப்பர் சிக்ஸ் சுற்றை தாண்டிய பிறகு அரையிறுதியில் அவுஸ்திரேலியாவை தென்ஆப்பிரிக்கா எதிர்கொண்டது.

இதில் அவுஸ்திரேலியா 213 ஓட்டங்கள் எடுக்க, தென்ஆப்பிரிக்காவும் 213 ரன்னில் ஆல்-அவுட் (சமன்) ஆகிப் போனது. சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஓட்டவிகித அடிப்படையில் அவுஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது.

2007-ம் ஆண்டு உலகக்கிண்ணம்:-

இந்த உலகக்கிண்ணத்தில் சூப்பர்-8 சுற்றுக்கு பிறகு அவுஸ்திரேலியாவை அரையிறுதியில் சந்தித்த தென்ஆப்பிரிக்க அணி வெறும் 149 ஓட்டங்களில் சுருண்டு படுதோல்வி அடைந்தது.

2011-ம் ஆண்டு உலகக்கிண்ணம்:-

இதில் காலிறுதியில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 222 ஓட்டங்களை கூட எடுக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா 172 ஓட்டங்களில் ஆல்-அவுட் ஆகி நடையை கட்டியது.

தற்போது நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு காலிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

SHARE