காந்திஜி – நாட்டின் முதல் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏஜெண்ட்டாக செயல்பட்டவர்: – சர்ச்சையை கிளப்பினார் அருந்ததிராய்!

375

இந்தியாவின் தேசியத் தந்தை காந்திஜி, நாட்டின் முதல் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏஜெண்ட்டாக செயல்பட்டவர் என்று பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளார். உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூரில் நேற்று நடந்த 10வது திரைப்பட விழாவில் எழுத்தாளர் அருட்ந்ததிராய் உரையாற்றினார். இதன் போது, காந்திஜி இந்தியாவின் முதலாவது கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏஜெண்ட் என்றும், இதனை தான் அவர் எழுதிய புத்தகங்களை வைத்தே கூறுவதாகவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரை பின்வருமாறு: நாட்டில் வழிபாட்டுக்குரியவராக இருக்கும் காந்தியைப் பற்றி பொய்யான கற்பிதங்கள் கற்பிக்கப்படுகின்றன.

தலித்துகள், பெண்கள் மற்றும் ஏழைகளைப் பற்றி மிக மோசமாக அவர் எழுதியுள்ளார். இந்த நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவுடனான முதலாவது தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தியவர் மகாத்மா காந்தி. அவர் இந்த நாட்டின் முதலாவது கார்ப்பரேட்டுகளின் ஏஜெண்ட். 1909 ஆம் ஆண்டு முதல் 1946ஆம் ஆண்டு காந்தி எழுதிய எழுத்துகளை நன்கு படித்த பின்னரே நான் இக்கருத்தை முன்வைக்கிறேன். நாட்டின் பிரதமராக நரேந்திர மோடிதான் இருக்கிறார்.

ஆனால் அம்பானிகளுக்கும் டாட்டாக்களுக்குமான விருப்பமானவராகத்தான் அவர் செயல்படுகிறார். கூட்டத்தின் போதே, இளைஞர்கள் பலர் எழுத்தாளர் அருந்ததியை எதிர்த்து பேசியதாகவும், இருந்த போதிலும், தான் பேசியதை அருந்ததி நியாயப்படுத்தி பேசியதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் தான், மகாத்மா காந்தியை முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கடுமையாக விமர்சித்தார். இந்த விஷயம் பாராளுமன்றம் வரை பரபரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து எழுத்தாளரின் இந்த சர்ச்சை பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது

SHARE