மெக்குல்லத்துக்கு உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

370
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனைக்கான விருதுகள் வழங்கும் விழா ஆக்லாந்தில் நேற்று நடந்தது.2014 – 2015 ஆண்டுக்கான நியூசிலாந்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக அணித்தலைவர் பிரன்டன் மெக்குல்லம் தெரிவு செய்யப்பட்டார்.

சமீபத்தில் நடந்த உலகக்கிண்ணப் போட்டியில் ஆக்ரோஷமான செயல்பட்டு நியூசிலாந்து அணியை முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு மெக்குல்லம் அழைத்துச் சென்றார்.

இதனை கௌரவிக்கும் வகையில் மெக்குல்லத்துக்கு Sir Richard Hadlee விருது வழங்கப்பட்டது.

ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர், ஒருநாள் போட்டி வீரர், டி20 போட்டி வீரர் ஆகிய மூன்று விருதுகளையும் கனே வில்லியம்சன் தட்டிச் சென்றார்.

நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவி சுசி பேட்ஸ், ஆண்டின் சிறந்த வீராங்கனையாக தெரிவானார்.

SHARE