மோசமான உலகக்கிண்ண கிரிக்கெட் அணி அறிவிப்பு.. அதிக இடங்களை பிடித்த இங்கிலாந்து வீரர்கள்

356
நியூசிலாந்து இணையதளம் ஒன்று மோசமான உலகக்கிண்ண அணி ஒன்றை `நாட் பர்ஸ்ட் லெவன்’ (முதல் 11 பேர் அல்ல) என்ற பெயரில் அறிவித்துள்ளது.முன்னதாக ஐசிசி, நடந்து முடிந்த உலகக்கிண்ணத் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தெரிவு செய்து உலகக்கிண்ண கனவு அணியை அறிவித்திருந்தது. இதற்கு மெக்குல்லம் அணித்தலைவராக இருந்தார்.

இந்நிலையில் இதற்கு போட்டியாக நியூசிலாந்து இணையதளம் ஒன்று உலகக்கின்ணத் தொடரில் மோசமாக விளையாடிய வீரர்களை வைத்து `நாட் பர்ஸ்ட் லெவன்’ என்ற ஒரு அணியை அறிவித்துள்ளது.

இந்த அணிக்கு முதல் சுற்றில் வெளியேறிய இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் இயன் மோர்கனை அணித்தலைவராக தெரிவு செய்துள்ளது.

நாட் பர்ஸ்ட் லெவன் அணி விவரம்:-

டிவைன் ஸ்மித் – மேற்கிந்திய தீவுகள்

குவிண்டன் டி காக் – தென் ஆப்பிரிக்கா

கேரி பேலன்ஸ் – இங்கிலாந்து

கிருஷ்ண சந்திரன் – ஐக்கிய அரபு எமிரேட்

இயன் மோர்கன் – அணித்தலைவர் இங்கிலாந்து

ஷாகித் அப்ரிடி – பாகிஸ்தான்

லுக் ரோன்க்கி – விக்கெட் கீப்பர் நியூசிலாந்து

கெவின் ஓ பிரையன் – அயர்லாந்து

ஸ்டூவர்ட் பிராட் – இங்கிலாந்து

மிட்செல் மெக்லினாகன் – நியூசிலாந்து

கிமார் ரோச்- மேற்கிந்திய தீவுகள்

பயிற்சியாளர்: பீட்டர் மோர்ஸ் – இங்கிலாந்து

SHARE