இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா உதவி செயலாளர்

331
ஐக்கிய நாடுகளின் உதவி பொதுச் செயலாளர் ஹவுலியேங் ஷூ இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அவர் இன்றைய தினம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 10ம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் உதவிச் செயலாளர், பலதரப்பட்டவர்களுடன் சந்திப்பில் ஈடுபடுவார்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கான தேவைகளை இனங்காண்பது குறித்து அரசின் சிரேஷ்ட அதிகாரிகள், அபிவிருத்திப் பங்காளிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.

ஐ.நா உதவி பொதுச் செயலாளர், வட மத்திய மற்றும் வட மாகாணங்களுக்கும் விஜயம் செய்வதற்கு தீர்மானித்துள்ளார் எனவும்,

குறித்த மாகாணங்களிலுள்ள அரசின் உயரதிகாரிகள், பிரஜைகள் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் பயனாளிகளையும் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

SHARE