பல நபர்களை கூண்டோடு கடத்தி சென்ற தீவிரவாதிகள் – அதிரடியாக மீட்ட பிரான்ஸ் சிறப்பு படை

356
தீவிரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பல நபர்களை பிரான்ஸ் சிறப்பு படையினர் அதிரடியாக மீட்டு வந்துள்ளனர்.நெதர்லாந்து நாட்டை சேர்ந்த Sjaak Rijke என்ற நபர் உள்பட பல பேரை, மாலி(Mali) நாட்டு AQIM தீவிரவாதிகள் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் கடத்தி சென்றனர்.

அல்-கொய்தா தீவிரவாத அமைப்பு கட்டுப்பாட்டில் உள்ள மாலியின் பல பகுதிகளில் மோசமான அட்டூழியங்கள் நடந்து வருகிறது.

இதனிடையில், பல நபர்களை கடத்தி சென்று பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டு இருப்பதால் அவர்களை மீட்கும் பணியில் பிரான்ஸ் சிறப்பு படையினர் தீர்மானித்தனர்.

இதனையடுத்து அதிரடி திட்டத்தை வகுத்த சிறப்பு படையினர், மாலியில் உள்ள Tessalit பகுதியில் நுழைந்து தீவிரவாதிகள் மீது ஆவேசமாக தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலை எதிர்க்க முடியாத தீவிரவாதிகள் பலர் பலியாகினர். இதன்பின் நெதர்லாந்து நபர்களை பத்திரமாக மீட்ட சிறப்பு படையினர், அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர்.

இதுகுறித்து பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹாலாண்டே(François Hollande) கூறுகையில், இந்த தாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் சிறப்பு படையினர் திறம்பட செயல்பட்டு பிணையக்கைதிகளை பத்திரமாக மீட்டதற்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும் Sjaak Rijke உள்ளிட்ட அனைத்து நபர்களும் ஆரோக்கியமாக உள்ளதாக நெதர்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் Bert Koenders தெரிவித்துள்ளார்.

SHARE