ஹர்பஜன்சிங் டோனியை சீண்டிப் பார்த்துள்ளார்.

376
இந்தியாவின் தலைசிறந்த அணித்தலைவர் கங்குலி தான் என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் மூத்த வீரரான ஹர்பஜன்சிங், இந்திய அணியில் இருந்து ஒதிங்கி இருக்கிறார். தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் டெல்லியில் கிரிக்கெட் இன்ஸ்ட்டிடியூட் தொடக்க விழாவில் பங்கேற்ற ஹர்பஜன்சிங், சச்சின், கங்குலி, டிராவிட், கும்ப்ளே, லட்சுமணன் போன்ற மிகப்பெரிய வீரர்களுடன் ஆடும் வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டமாகும் என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நான் கிரிக்கெட்டில் எதையாவது சாதித்துள்ளேன் என்றால், அதில் இவர்களின் பங்களிப்பு கண்டிப்பாக உள்ளது. இந்தியா கண்ட தலை சிறந்த அணித்தலைவர்களில் ஒருவர் கங்குலியாகும்.

ஷேவாக், கோஹ்லி உள்ளிட்ட தலை சிறந்த வீரர்கள் அவர்களுக்கே உரித்தான சிறப்பான டெக்னிக் வைத்துள்ளனர். எனவே, அவர்களின் திறமையை அப்படியே பயன்படுத்திக்கொள்வதுதான் நல்லது என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே, டோனிக்கு எதிராக யுவராஜ்சிங் தந்தை யோக்ராஜ் பேட்டி கொடுத்தார், இதைத் தொடர்ந்து மூத்த வீரர் ஹர்பஜன்சிங் டோனியின் கேப்டன்ஷிப் பற்றி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE