டுமினியை சூப்பராக ஆட்டமிழக்க செய்த அக்சர் படேல்

381
ஐபிஎல் தொடரில் நேற்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி அணித்தலைவர் டுமினியை பஞ்சாப் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் ஆட்டமிழக்க செய்த முறை அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.புனேயில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி முதலில் விளையாடி 20 ஓவர் முடிவில் 165 ஓட்டங்களை குவித்தது.

பின்னர் பஞ்சாப் அணியின் இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்க வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்த போது, மற்றொரு தொடக்க வீரரான அகர்வாலுடன் அணித்தலைவர் டுமினி ஜோடி சேர்ந்தார்.

அப்போது பஞ்சாப் வீரர் அக்சர் படேல் வீசிய பந்தை அகர்வால் அடிக்க, அது அவரிடமே சென்றது.

அந்த பந்தை பிடித்த அக்சர் படேல் மறுமுனையில் இருந்த டுமினியை ஓட்ட முறையில் வெளியேற்றினார். இதனால் டுமினி 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

SHARE