முகமது ஹபீஸ் மீண்டும் அணிக்கு திரும்ப அனுமதி அளித்த ஐ.சி.சி…

357
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான முகமது ஹபீஸிக்கு பந்துவீச சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி அளித்துள்ளது.பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரான முகமது ஹபீஸி பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக நடுவர்கள் தெரிவித்தனர்.

இதனால் அவரது பந்து வீச்சு அவுஸ்திரேலியாவில் உள்ள பயிற்சி மையத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது அவர் ஐ.சி.சி. விதிமுறைக்கு மாறாக பந்து வீசியது தெரிய வந்தது. இதனால் கடந்த நவம்பர் மாதம் முதல் அவர் பந்து வீச ஐ.சி.சி. தடை விதித்தது.

இதனால் தனது பந்து வீச்சை ஹபீஸ் சரி செய்தார். இதனைத்தொடர்ந்து கடந்த 9ம் திகதி சென்னையில் உள்ள ஐ.சி.சி. விதிமுறைக்கு உட்பட்ட பந்து வீச்சு மையத்தில் சோதனைக்குட்பட்டார். அப்போது அவரது ஐ.சி.சி. விதிமுறைக்கு உட்பட்டே பந்து வீசியது தெரிய வந்தது. இதனால் அவர் மீதான தடை உடனடியாக நீக்கப்பட்டது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் ஷகார்யார் கான் கூறும்போது

‘‘ஹபீஸ் மீண்டும் அணிக்கு திரும்புவதன் மூலம் பாகிஸ்தான் பந்து வீச்சு மேலும் வலுப்படும். ஹபீஸ் மீண்டும் தனது திறமையான பந்து வீச்சை வெளிப்படுத்துவார் என்று பாகிஸ்தான் அணி நம்புகிறது. சயீத் மற்றும் ஹபீஸ் ஆகியோர் பந்து வீசாதது உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை பெரிதும் பாதித்தது’’ என்றார்.

SHARE