த்ரில் வெற்றி பெற்ற சென்னை: இறுதி போட்டிக்கு முன்னேறியது…

362
ஐபிஎல் போட்டியின் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியது.

 

ராஞ்சியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.

அதன்படி பெங்களூர் அணியில் கிறிஸ் கெயில் மற்றும் விராத் கோலி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

அணித்தலைவர் கோலி 12 ஓட்டங்களிலும் டி வில்லியர்ஸ் 1 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

எனினும் கெயில் சிறப்பாக ஆடி 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 41 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் 28 ஓட்டங்களும், சர்பராஸ் கான் 31 ஓட்டங்களும் எடுத்தனர்.

இறுதியில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்கள் எடுத்தது.

சென்னை அணியின் ஆசிஸ் நெஹ்ரா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதையடுத்து 140 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

டுவெயின் ஸ்மித் 17 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் இணைந்த மைக் ஹசி மற்றும் டூ பிளசிஸ் நிதானமாக ஆடினர்.

டூபிளசிஸ் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ஹசி 3 பவுண்டரி, 2 சிக்சர் உட்பட 56 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அணித்தலைவர் டோனி நிதானமாக ஆடி அணியை வெற்றி பெற செய்தார். இறுதியில் சென்னை அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பெங்களூரு தரப்பில் யுவேந்திர சாகல் 2 விக்கெட்கள் கைப்பற்றினார். இந்த வெற்றி மூலம் சென்னை அணி இறுதிபோட்டியில் நுழைந்தது.

SHARE