புதிய சாதனை படைத்த விராட் கோஹ்லி..

383
நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி 500 ஓட்டங்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.ராஞ்சியில் நேற்று நடைபெற்ற 2வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை- பெங்களூர் அணிகள் மோதின. இதில் சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் சென்னை அணியின் பந்துவீச்சாளர் ஆசிஸ் நெஹ்ரா பந்தை சிக்சருக்கு விரட்டிய கோஹ்லி, இந்தத் தொடரில் 500 ஓட்டங்களை கடந்த 4வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இவர், 16 போட்டியில் 3 அரைசதம் உட்பட 505 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

ஏற்கனவே ஐதராபாத்தின் டேவிட் வார்னர் (562 ஓட்டங்கள்,14 போட்டி), ராஜஸ்தானின் அஜின்கியா ரஹானே (540 ஓட்டங்கள், 14 போட்டி), பெங்களூருவின் டிவில்லியர்ஸ் (513 ஓட்டங்கள், 16 போட்டி) ஆகியோர் இம்மைல்கல்லை எட்டினர்.

மேலும், ஐபிஎல் அரங்கில் ஒரு தொடரில் 500 ஓட்டங்களுக்கு மேல் 3 முறை எடுத்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு 2013 (634 ஓட்டங்கள்), 2011 (557 ஓட்டங்கள்) தொடரில் இந்த இலக்கை எட்டியுள்ளார்.

SHARE