சச்சின் ஆகிறாரா கோஹ்லி? காலில் விழுந்த ரசிகர்

350
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ரசிகர் ஒருவர் பெங்களூர் அணித்தலைவர் கோஹ்லியின் காலில் விழுந்தது பார்ப்பவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.பூனேயில் நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் பெங்களூர்- ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் பெங்களூர் அணி 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் ரசிகர் ஒருவர் கோஹ்லியின் காலில் விழுந்தார். இது அங்கு இருந்தவர்கள் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

முன்பு ஜாம்பவானான சச்சின் காலில் ரசிகர்கள் விழுந்துள்ளனர். ஆனால் இளம் வீரரான கோஹ்லியின் காலில் ரசிகர் ஒருவர் விழுந்தது தொடர்பாக பலரும் சச்சினுடன் சேர்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய வீரர் ஜடேஜா டிவிட்டரில், ரசிகர் கோஹ்லியின் காலில் விழுவது போன்ற படத்தை பதிவேற்றி,“ ஒரு ரசிகர் கோஹ்லியின் காலில் விழுகிறார். பார்த்தீர்களா?“ என்றுக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE