“விடுதலைப் புலிகளின் பெண் நிருபரை சிதைத்து சீரழித்த சிங்கள படையினர்!” இதற்கு மைத்திரி அரசே என்ன பதில்?

706

 

விடுதலைப் புலிகளின் பெண் நிருபரை சிதைத்து சீரழித்த சிங்கள படையினர்!

லண்டன்: வன்னி இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப் புலிகளின் பெண் நிருபரும், போராளியுமான இசைப்பிரியாவை ராணுவத்தினர் வஞ்சகமாக வரவழைத்து, கற்பழித்து படுகொலை செய்துள்ளனர்.

இந்த படுபாதக காட்சியை இங்கிலாந்தின் சேனல் 4 நேற்று வெளியிட்டது. பார்ப்பவர்களை கதற வைக்கும் அளவுக்கு படுகோரமாகவும் மோசமாகவும் சிங்களப் படையினர் இசைப்பிரியாவைச் சீரழித்திருந்தனர்.

வாழ்க்கையில் இப்படி ஒரு கோரமான நிகழ்வை பார்த்ததில்லை என்றும், இந்தக் காட்சியை கண்கொண்டு பார்க்க முடியவில்லை என்றும் சேனல் 4 செய்தியாளரே மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரின் போது, ராணுவம் நடத்திய அத்துமீறல்கள் ஒவ்வொன்றாக ஆதாரங்களுடன் வெளிவந்தவண்ணம் உள்ளது.

இந்த காட்சிகள் தமிழர்களை மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நெஞ்சை பதறச் செய்து வருகிறது. அது தொடர்பான வீடியோ காட்சிகளை இங்கிலாந்து நாட்டின் சேனல்-4 என்ற தொலைக்காட்சி அவ்வப்போது ஒளிபரப்பி அம்பலப்படுத்தி வருகிறது.

இந்த கோரங்கள் அனைத்துக்கும் முக்கிய காரணமான இலங்கை அதிபர் ராஜபக்சே லண்டனில் தங்கியுள்ள நிலையில், அதே நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சேனல் 4, புதிய வீடியோ காட்சிகளை நேற்று ஒளிபரப்பியது.

விடுதலைப் புலிகளின் நிருபராகவும், போராளியாகவும் செயல்பட்டவர் இசைப்பிரியா.

இலங்கை ராணுவத்தின் கர்னல் நிலை அதிகாரி ரவிப்பிரிய என்பவரின் தலைமையில்தான் இந்த சித்திரவதை அரங்கேறியுள்ளது. அவர் கண்முன்னாலேயே இசைப்ரியா சிதைத்து சீரழிக்கப்பட்டுள்ளார்.

இசைப்பிரியா கைது செய்யப்பட்டது முதல் கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது வரை நடந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் இந்த ரவிப்பிரியவின் தலைமையில் வழிநடத்தப்பட்ட படையணியே காரணமாக இருந்திருக்கின்றது.

இசைப்பிரியாவின் சித்திரவதையின் போது அவர் கதறிய ஓலங்களை அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் சிலரும் கேட்டுள்ளனர். சத்தம் வராமலிருக்க அவர் வாயில் துணியை அடைத்து கொடுமைகளை அரங்கேற்றியுள்ளனர்.

இசைப்பிரியாவைப் சித்திரவதை செய்து படுகொலை செய்யும் வரைக்கும் அனைத்து நிகழ்வுகளும் ஒளிப்படக் காட்சிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. அவர் கற்பழிக்கப்பட்ட காட்சிகள் இன்றும் கூட ரவிப்பிரியாவின் மொபைலில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன.

இறுதிப் போரில் பங்கு கொண்டிருந்த சிங்கள ராணுவத்தினர் தம்மிடம் சிக்கிய புலிகளின் மகளிர் அணியினரை கற்பழித்துக் கொன்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் படைத்துறை உயர் அதிகாரிகளின் மொபைல் தொலைபேசிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்போது போர்க் குற்றம் தொடர்பான மேலும் பல உண்மைகளைக் கண்டறிய முடியும் என்றும் தெரிகிறது.

இசைப்பிரியா சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி வெளிவந்த உடனேயே, “இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை இராணுவத்தின் உளவுத் துறை வீரனொருவன் இசைப்பிரியாவினால் கொல்லப்பட்டதாகவும், அதற்குப் பழிவாங்கும் முகமாகவே இசைப் பிரியா சிதைக்கப்பட்டதாகவும்” செய்தியைப் பரப்பியது ராணுவம். போர்க் குற்றத்திலிருந்து தப்பிக்க இந்த உத்தியைக் கையாண்டுள்ளனர்.

ஊடகங்களும் ஏமாந்து போய் இந்தத் தகவலை வெளியிட்டுவிட்டன. ஆனால் உண்மையில் இப்படி நடக்கவில்லை என்கிறார்கள்.

நிராயுதபாணியாக நின்ற செய்தியாளரும் கலைஞருமான இசைப்பிரியாவின் படுகொலையையும் அதனால் ஏற்படும் விளைவுகளின் வீரியத்தையும் குறைக்கவே அவரை பெண்புலியாக சித்தரித்து செய்தி பரப்பியுள்ளனர் சிங்களத் தரப்பில்.

அவரை கொலை செய்த போது எடுக்கப்பட்ட கோரமான வீடியோவை முழுமையாக பார்த்தால் அவர் ஒரு நிராயுதபாணியாக இருப்பது தெரியவரும்.

“சிங்களத்தின் பரப்புரைகளை நம்ப வேண்டாம். செய்தியை ஆய்வு செய்த பிறகே வெளியிடவும். இசைப்பிரியா ஒரு நிராயுதபாணி. அதுமட்டுமல்ல, அவர் ஒரு இசைக் கலைஞர், செய்தியாளர், படங்களில் நடித்தவர்… இத்தகைய ஒருவரை ராணுவத்தினர் வெறியுடன் கற்பழித்து கொன்றுள்ளனர்.. இது மிகப் பெரிய போர்க்குற்றம் என்பதை தமிழர் ஊடகங்கள் உறுதிப்படுத்த வேண்டும்” என்று தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

பிள்ளையின் அறிக்கையில் இசைப்பிரியா, பாலச்சந்திரன், கேணல் ரமேஸ்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையர் நவ நீதம் பிள்ளை அவர்களின் இலங்கை தொடர்பான போர்க்குற்ற அறிக்கையில் கேணல் ரமேஸ், இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரின் படுகொலைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டு ஆயுத மோதல் முடிவுக்கு வந்ததன் பின்னர் போரின் இறுதிக் காலச் சம்பவங்கள் தொடர்பான ஒளிப் படங்களும் வீடியோப் படங் களும் வெளியாகியுள்ளன. அவை கைதிகள் சரணடைந்த பின்னர் அல்லது பாதுகாப்புப் படைகளின் காவலில் இருந்த போது அவர்கள் கொல்லப்பட்டனர் என்பதைக் காண்பிக்கின்றன.

2011 ஜூன் மாதம் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் மனித உரிமைகள் சபைக்கு  தொழில்நுட்ப அறிக்கையயான்றைச் சமர்ப் பித்தார். 2009 ஓகஸ்ட் 4 ஆம் திகதி சனல்-4 வெளியிட்ட வீடியோ காட்சியின் உண்மைத்தன்மையை வெளிக்காட்டுவதாக அது இருந்தது. 2009 செப்ரெம்பரில் அரசு தனது சொந்த தொழில்நுட்ப ஆய்வு முடிவுகளை அறிவித்தது. அதில் சிறப்பு அறிக்கையாளரின் கண்டுபிடிப்புக்களை கேள்விக்குரியதாக்கியிருந்தது.

இதற்கு பதிலாக சிறப்பு அறிக் கையாளர் தொழில்நுட்ப ஆய் வுகளை மேற்கொள்ளவென சுயாதீன நிபுணர் குழுவை நிய மித்தார். அந்தக் குழு முதலில் கண்டறியப்பட்டவைகளை உறுதி செய்தது. இந்த விடயம் தொடர்பாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிண ஆணைக்குழுவானது உண் மைத்தன்மை குறித்து  ஒரு முடிவுக்கு வராத நிலையில் மேற்கொண்டும் ஆய்வுகள் நடத்துமாறு அரசுக்கு பரிந் துரை செய்திருந்தது. இந்த விடயம் இப்பொழுது இராணுவ நீதிமன்றத்தின் ஆய் வில் இருப்பதாக அரசு கூறுகிறது.

அதன் முடிவுகள் இன்னமும் வெளிவரவில்லை.   பாலச்சந்திரன் பற்றிய படங்கள் 2013 பெப்ரவரியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் இலங்கைப் படைகளின் காவலில் பதுங்குக் குழியொன்றின் மேல் உயிருடன் அமர்ந்திருப்பதைக் காட்டும் படங்களும் அதன் பின்னர் இறந்த நிலையிலான அவரது உடல் மார்பில் குண்டுகள் துளைத்திருந்த படங்களும் தொடர்ச்சியாக வெளிவந்திருந்தன. ஒரு சில மணிநேரம் முன் பின்னராக ஒரே கமராவால் இந்தப் படங்கள் எடுக்கப்பட்டிருந்தன.

கேணல் ரமேஷ் தொடர்பான படங்கள் சனல்-4 மற்றும் வேறு வகை யான வீடியோ மற்றும் புகைப் படங்களில் ரி.துரைராஜசிங்கம் (கேணல் ரமேஷ்) இலங்கை இராணுவத்தினரால் விசாரிக்கப்படுவது காட்டப்படுகின்றது. பின்னர் அவரது சிதைவுற்ற உடலின் படம் வெளியாகியுள் ளது. கேணல் ரமேஸின் நிலைமை குறித்த சாட்சி யங்களும் ஆதாரங்களும்  அவர் பாதுகாப்புப் படைகளின் காவலில் இருந்த போதே கொல்லப்பட்டார் என்பதாக காட்டுகின்றன.

இசைப்பிரியாவின் படுகொலை தமிழீழ விடுதலைப் புலிகளின் பத்திரிகை மற்றும் தொடர்பா டல் பிரிவின் உயர்மட்ட உறுப்பினர் சோபனா (இசைப்பிரியா) வின் கொலை பற்றிய சனல்-4 புகைப்படங்கள் மற்றும் வீடியோ படங்கள் அவர் விசாரணையின்றி அந்த இடத்திலேயே படையினரால் கொல்லப்பட்டார் என்பதைக் காட்டுவதாக இருக் கின்றனவென்று சிறப்பு அறிக் கையாளர் அறிவித்துள்ளார். வீடியோ மற்றும் படங்களில் காட்டியிருப்பதன்படி அவரது மேலாடைகள் இழுத்து ஒதுக்கப்பட்டு அவரது வெறும் மேனி தெரியும்படி செய்யப்பட்டிருந்துள்ளது. 2013 நவம்பரில் சனல்-4 வெளியிட்டபடங்களில் இராணுவத்தால் அவர் உயிருடன் பிடிக்கப்படுவது காட்டப்பட்டுள்ளது.

மேற்கூறிய மூன்று சம்பவங் கள் தொடர்பாகவும் அரசு வெளியிட்ட கருத்துக்களில் குறித்த படங்களும் நிகழ்வுகளும் உறுதிபடுத்தப்படாமலும் நிரூபிக்கப்படாமலும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளைக்கொடி சம்பவங்கள் 2009 மே 18 ஆம் திகதி விடு தலைப் புலிகள் இயக்க உயர் மட்டத் தலைவர்கள் பத்திரமாக சரணடையலாம் என்று அரசு உறுதி வழங்கியிருந்த நிலையிலும் சட்டவிரோதமான முறையில் கொலை செய்யப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்களை செயலாளர் நாயகத்தின் நிபுணர்குழு ஆராய்ந்துள்ளது.    அரசின் உயர்மட்ட அதிகாரிகளும் இராணுவ அதிகாரிகளும் பொதுக் கூட்டங்களிலும், சர்வதேச மேடைகளிலும் இது பற்றி முரண்பாடான விவரங்களை வெளியிட்டுள்ளார்கள்.

குறித்த சம்பவம் பற்றிய பின்புலம் தெளிவில்லாது போனாலும் புலிகள் அமைப்பின் தலைவர்கள் சரணடைய விரும்பினார்கள் என்பதான முடிவுக்கு நிபுணர்குழு வந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் தற்போது நாட்டுக்கு வெளியிலுள்ள தரப்புகளிடமிருந்து வந்து கொண்டே இருக்கின்றன.

வெள்ளைக்கொடி சம்பவம் குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது தர்க்க ரீதியில் அலசவோ புலனாய்வு செய்யவோ தவறியிருக்கிறது. ஆனால் இராணுவ ஜெனரல்கள் மற்றும் அரச அதிபர்களின் சாட்சியங்களை குறிப்பிட்டுள்ளது. அவர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்கள்.    இதுபற்றி அரசு வெளியிட்ட கருத்தில் நம்பகமான சாட்சியங்கள் இல்லாமையால் மேற் கொண்டும் விசாரணைகள் நடத்தப்படவில்லை என்று அறிவித்துள்ளது.

SHARE