2017–ம் ஆண்டு இந்தியாவில் 17 வயதுக்குட்பட்டோர் உலககோப்பை கால்பந்து

371

இந்தியாவில் கிரிக்கெட் பிரபல விளையாட்டாக இருக்கிறது. மற்ற விளையாட்டுகளைவிட கிரிக்கெட்டுக்கு தான் இங்கு அதிகளவு மவுசு இருக்கிறது.

இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டி இந்தியாவில் நடந்தது. இதனால் கால்பந்து மீது ஆர்வம் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்தியாவில் 2017–ம் ஆண்டு செப்டம்பர்– அக்டோபர் மாதங்களில் 17 வயதுக்குட்பட்டோர் உலககோப்பை கால்பந்து போட்டி நடக்கிறது. இந்த தகவலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் தெரிவித்து உள்ளது.

இந்த போட்டியில் இந்தியா உள்பட 24 அணிகள் பங்கேற்கின்றன. 23 நாட்கள் பல்வேறு நகரங்களில் போட்டிகள் நடக்கின்றன. இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போட்டியின் இயக்குனர் சேவியர் சிபி கூறுகையில், போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் பிபா வழிகாட்டுதல்படி தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான ஆய்வு அடுத்த ஆண்டு நடக்கும் என்றார்

SHARE