பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு ஷரபோவா முன்னேற்றம்

329

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்றில் நடப்பு சாம்பியன் ஷரபோவா (ரஷியா), சமந்தா ஸ்டோசர் (ஆஸ்திரேலியா) மோதினர். இதில் ஷரபோவா 6–3, 6–4 என்ற நேர்செட் கணக்கில் வென்று 4–வது சுற்றுக்குள் நுழைந்தார்.

9–ம் நிலை வீராங்கணையான மகரோவா (ரஷியா) 6–2, 6–4 என்ற நேர்செட் கணக்கில் சகநாட்டு வீராங்கணையான வெஸ்னினாவை வீழ்த்தி 4–வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

11–ம் நிலை வீராங்கனை ஜெர்மனியின் கெர்பர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவர் ஸ்பெயினை சேர்ந்த 21–ம் நிலை வீராங்கனையான முகுருஜாவிடம் 6–4, 2–6, 2–6 என்ற செட் கணக்கில் தோற்றார்.

3–வது சுற்றில் 8–ம் நிலை வீராங்கனை நவாரோ (ஸ்பெயின்) 6–3, 6–7 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலியின் பென்னாட்டிடம் வீழ்ந்தார். மற்ற ஆட்டங்களில் இவானோவிக் (செர்பியா), சபரோவா (செக்குடியரசு), கார்னெட் (பிரான்ஸ்) ஆகியோர் 4–வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

SHARE