2400 ஆண்டுகளுக்கு முந்தைய தங்கத்தாலான பங்கி கிண்ணங்கள் ரஷ்யாவில் கண்டெடுப்பு

330
ரஷ்யாவில் பழங்கால மன்னர்கள் பயன்படுத்திவந்த 2400 ஆண்டுகளுக்கு முந்தைய தங்கத்திலான ’பங்கி’ (கஞ்சா மற்றும் அபின் கலந்து தயாரிக்கப்படும் ஒருவித போதை பானம்) கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.பிரபல கிரேக்க வரலாற்றாசிரியரான ஹெரோடோட்டஸ், இயேசு கிறிஸ்துவுக்கு முந்தைய காலகட்டத்தில் ரஷ்யாவை ஆண்ட அரசர்கள் தங்கக் கிண்ணத்தில் பங்கி தயாரித்து அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்த மதுவின் போதையானது, வீராவேசமாக போர்க்களத்தில் சண்டையிடும் ஆற்றலை அவர்களுக்கு வழங்கியது என குறிப்பிட்டுள்ளார்.

அவ்வகையில், முந்தைய ரஷ்ய மன்னர்களும், தளபதிகளும் பயன்படுத்தியதாக நம்பப்படும் பங்கி கிண்ணங்கள், தங்க ஆபரணங்கள் மற்றும் வளையல்கள் ரஷ்யாவில் கண்டெடுக்கப்பட்டு, அங்குள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

SHARE