சந்தர்பால் வேண்டுகோள் நிராகரிப்பு: வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து நீக்கம்

323
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரர் சந்தர்பால். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் பயிற்சி அணியில் சேர்க்கப்படவில்லை.

அவரை ஓரம் கட்ட கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து இந்த நடவடிக்கை எடுத்தது. தன்னை ஓய்வு பெறும்படி கட்டாயப்படுத்தக்கூடாது. ஆஸ்திரேலியா தொடருக்கு தன்னை தேர்வு செய்யும்படி சந்தர்பால் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான 14 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டது. இதில் சந்தர்பால் இடம் பெறவில்லை. அவர் நீக்கப்பட்டு உள்ளார். 2 புதுமுக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சந்தர்பால் வெறும் 92 ரன் மட்டுமே எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

SHARE