தேர்தல் குழு துணை தலைவர் தப்பியோட்டம்: புருண்டி நாட்டில் பரபரப்பு

350
புருண்டியில் உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில் அந்நாட்டின் தேர்தல் குழு துணை தலைவர் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புருண்டியில், அதிபர் பியார்ரே நகுருன்ஜிசா பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் 3–வது தடவையாக அவர் போட்டியிடுகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டம் நடைபெறுகிறது. இதற்கிடையே அதிபர் பியார்ரே நகுருன்ஜிசா, தான்சானியா நாட்டில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க சென்றார். இந்த நிலையில் அங்கு திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டது.

இப்புரட்சியை அதிபர் பியார்ரேவுக்கு எதிராக செயல்படும் தளபதி கோட் பிராய்டு நியோம்பர் நடத்தினார். ஆனால் அரசு விசுவாச ராணுவ படைகள் புரட்சியை முறியடித்து விட்டது.

தேர்தல்கள் மே 26-ம் திகதி நடைபெறவிருந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோள் படி ஜுன் 5-ம் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் 5 பேர் அடங்கிய தேர்தல் குழுவின் துணை தலைவர் ஸ்பெஸ் கரித்டாஸ் நதிரோன்கேயே பக்கத்து நாடான ருவாண்டாவிற்கு தப்பியோடியுள்ளார். அவர் தப்பியோடியதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. ஆனால் தனது ராஜினாமா கடிதத்தை மட்டும் விட்டு சென்றுள்ளார். இதனால் வரும்  ஜுன் 5-ம் திகதி நடக்கவிருக்கும் தேர்தல் பாதிக்கப்படாது என கூறப்படுகிறது. அதே சமயம் 5 பேர் குழுவில் 2 பேர் இல்லை என்றால் எந்தவித முடிவுகளும் எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இது அதிபர் பியார்ரே நகுருன்ஜிசாவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது

SHARE