ஊழல் புகார்களுக்கு இடையே பதவி விலகிய பிபா அமைப்பின் தலைவர்: 40 ஆண்டு பந்தம் முடிவுக்கு வந்த சோகம் 

322
தொடர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இடையே பிபா அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக செப் பிலாட்டெர் அறிவித்துள்ளார்.சுவிட்சர்லாந்தை சேர்ந்த செப் பிலாட்டெர்(Sepp Blatter) பிபா அமைப்பின் தலைவராக 1998 ஆண்டு தெரிவு செய்யப்பட்டார்.

கடந்த 17 ஆண்டுகளாக பிபாவின் தலைவராக செயல்பட்டுவருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலககோப்பை கால்பந்து போட்டிகளில் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் பிபா அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக செப் பிலாட்டெர் அறிவித்துள்ளார். ஜூரிச்சில் நடைபெற்ற பிபா மாநாட்டில் கலந்துகொண்ட பிலாட்டெர் பேசுகையில், கடந்த 40 ஆண்டுகளாக எனக்கும் கால்பந்து மற்றும் பிபா அமைப்புக்கும் இடையே பிரிக்கமுடியாத பந்தம் இருந்துவருகிறது.

பிபா அமைப்பை மற்ற அனைத்தையும் விட அதிகமாக நேசிக்கிறேன்.

தற்போது தலைவர் பதவியில் இருந்து விலகுவது என்று முடிவு செய்துள்ளேன், எனினும் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை இந்த பதவியில் தொடரவுள்ளேன்.

பிபா அமைப்பின் தலைவருக்கான தேர்தலை உடனே நடத்தவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE