செல்பியில் கலக்கிய மெஸ்ஸி, கோபே: கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த விளம்பரம் இதுதான்

365
கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியும், கூடைப்பந்து ஜாம்பவான் கோபேயும் இணைந்து நடித்த விளம்பரம் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த விளம்பரமாக ரசிகர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளது.பிரபல வீடியோ இணையத்தளமான யூ-டியூப் தனது 10ஆம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இதுவரை வெளிவந்ததில் சிறந்த விளம்பரம் எது? என்று பயனர்களிடம் கேட்டுக் கொண்டது.

இதில் பயனர்கள், டர்கிஷ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்காக மெஸ்ஸியும், கோபேயும் நடித்த விளம்பரத்திற்கு அதிக வாக்குகளை அளித்துள்ளனர்.

இந்த விளம்பரத்தில் செல்பி எடுக்கும் போட்டி நடைபெறும். இதில் இருவரும் நாடு நாடாக அலைந்து செல்பி எடுப்பார்கள். இது பயனர்களை அதிகமாகவே கவர்ந்துள்ளது.

இந்த வீடியோவை யூ டியூபில் இதுவரை 14 கோடிக்கும் மேற்பட்டவர்கள் கண்டு களித்துள்ளனர்.

டாப் 5 விளம்பரம்:-

1. “Kobe vs. Messi: The Selfie Shootout”

2. Volkswagen “The Force”

3. Always “#LikeAGirl”

4. Volvo Trucks “The Epic Split fe

SHARE