இந்திய அணியின் அடுத்த ஷேவாக்: தவானை புகழ்ந்து தள்ளிய கோஹ்லி

353
துடுப்பாட்ட செய்தி
 

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் இல்லாத குறையை ஷிகர் தவான் தீர்த்து வைப்பார் என்று டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. இதில் முரளி விஜய் உடன் ஜோடி சேர்ந்து விளையாடிய தவான் 173 ஓட்டங்கள் எடுத்தார்.

இது தொடர்பாக விராட் கோஹ்லி கூறுகையில், வங்கதேச அணிக்கு எதிராக நாங்கள் 2 நாட்கள் தான் ஒழுங்காக விளையாட முடிந்தது. இருப்பினும் ஆட்டத்தின் பெரும் பகுதியை இந்தியா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

இதேபோன்ற கிரிக்கெட் ஆட்டத்தை தான் நாங்கள் விரும்புகிறோம். அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் ஆட்டத்தின் போக்கை தனியாக மாற்றக் கூடியவர்.

தவான் தற்போது செயல்படுவது போன்று சிறப்பாக விளையாடினால் டெஸ்ட் போட்டிகளில் ஷேவாக் போன்ற வீரராக மாறலாம்.

இந்திய பந்துவீச்சாளர்களையும் பாராட்ட வேண்டும். அவர்கள் ஒரு குறிக்கோளோடு பந்து வீசினர் என்று கூறியுள்ளார்.

SHARE