அசத்துமா இலங்கை அணி? பாகிஸ்தானுடன் முதல் டெஸ்ட் போட்டியில் நாளை மோதல்

364
இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை காலே மைதானத்தில் தொடங்குகிறது.பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 ‘டி-20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இதில் முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கி 21ம் திகதி வரை நடக்கிறது. சமீபத்தில் இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது.

மேத்யூஸ் தலைமையிலான இந்த அணியில் 8 வருடங்களுக்கு பிறகு ஜெகம் முபாரக் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், கித்துருவான் விதானகே, குசல பெரேரா, மற்றும் சமீர ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதே போல் பாகிஸ்தான் அணியில் பந்துவீச்சு சர்ச்சையில் சிக்கிய முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மல் இடம்பெறவில்லை

இலங்கை அணி:-

அஞ்சலோ மேத்யூஸ் (அணித்தலைவர்), லஹிரு திரிமன்னே, கவுஷ்ஹால் சில்வா, திமுத் கருணாரட்ன, குமார் சங்கக்காரா (விக்கெட் கீப்பர்), தினேஷ் சந்திமால், கிருத்துவான் வித்தானகே, ஜெஹான் முபாரக், குஷால் பெரேரா, ரங்கன ஹேரத், தில்ருவான் பெரேரா, தரிந்து கவுஷ்ஹால், நுவான் பிரதீப், தமிங்க பிரசாத், துஷ்மந்த சமிரா, சுரங்க லக்மால்

பாகிஸ்தான் அணி:-

மிஸ்பா-உல்-ஹக் (அணித்தலைவர்), முகமது ஹபீஸ், அகமது சிகஹாட், ஷான் மசூத், அசார் அலி (துணை அணித்தலைவர்), யூனிஸ் கான்,ஷபிக், ஹரிஸ் சொஹைல், சர்பிராஸ் அகமது (விக்கெட் கீப்பர்), யாசிர் ஷா, சுல்பிக்கார் பாபர், வஹாப் ரியாஸ், ஜூனைட் கான், இம்ரான் கான், எஹ்சான் அடில்

SHARE