இந்தியாவின் கோரிக்கைக்கிணங்க ஐக்கிய நாடுகள் சபை இன்றைய தினத்தை சர்வதேச யோகா தினமாகப் பிரகடனம்

315

 

இந்தியாவின் கோரிக்கைக்கிணங்க ஐக்கிய நாடுகள் சபை இன்றைய தினத்தை சர்வதேச யோகா தினமாகப் பிரகடனம் செய்துள்ளநிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முதற் தடவையாக சர்வதேச யோகா தினம் 177 நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என இந்தியா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஐ.நா.சபையில் 177 நாடுகள் ஆதரவளித்தன. இதனடிப்படையில், சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகளில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 47 இஸ்லாமிய நாடுகளும் பங்கேற்கின்றன.

image_handle (2) image_handle (3) image_handle (4) image_handle (5) image_handle (6) image_handle (7) image_handle (8)

 

ஆப்கானிஸ்தான், வங்கதேசம், துருக்கி, ஈரான், இந்தோனேசியா, ஐக்கிய அரபு எமிரேட், கத்தார் மற்றும் ஓமன் ஆகியவை இவற்றில் முக்கியமானவை. இதேவேளை, பாகிஸ்தான், சவுதி அரேபியா, மலேசியா, புருனே, கேமரூன், லிபியா ஆகிய 8 இஸ்லாமிய நாடுகள் யோகா தினத்தை ஏற்கவில்லை. இவை இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பவை. இதேபோல், வடகொரியா, எஸ்தோனியா, நமீபியா, ஜாம்பியா உள்ளிட்ட நாடுகளும் இதை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச யோகா தினம் இன்று யாழ்ப்பாணத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது. யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் மத்திய கல்லூரி மைதானத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

இந்திய துணைத்தூதுவர் நடராஜன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SHARE