பிரெஞ்சு நாட்டை சேர்ந்த செர்ஜே அட்லாய் இந்தோனேசியாவில் அடுத்து மரண தண்டனை…..

325

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது சட்டமாக உள்ளது. இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு, ஜகார்தா புறநகர் பகுதியில் போதை பொருட்களை விற்க முயன்றதாக கூறி பிரெஞ்சு நாட்டை சேர்ந்த செர்ஜே அட்லாய் கைது செய்யப்பட்டார்.

அவர் மீதான வழக்கு விசாரணையின் முடிவில், செர்ஜேவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து அந்நாட்டு அதிபருக்கு செர்ஜே சார்பில் கருணை மனு அளிக்கப்பட்டது. ஆனால் அம்மனு அதிபரால் நிராகரிக்கப்பட்டது. தனது கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தார் செர்ஜே. அம்மனுவை விசாரித்த நீதிமன்றம் அதிபரின் முடிவை ரத்து செய்ய முடியாது என நேற்று தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து விரைவில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த மயூரன் சுகுமாறன் மற்றும் ஆன்ட்ரூ சான் ஆகியோருக்கும், பிரேசில் நாட்டை சேர்ந்தவருக்கும் அந்நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.perans

 

 

SHARE