பரோட்டா சூரியுடன் குத்தாட்டம் போடவிருக்கும் பாலிவுட் கவர்ச்சி நடிகை!

591

ஜெய் நடித்த வடகறி படத்தில் சன்னிலியோன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது அனைவரும் தெரிந்ததே. இந்நிலையில் சன்னிலியோன் மற்றொரு தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

விமல், சூரி மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடிப்பில் வேகமாக வளர்ந்து வரும் படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. இப்படத்தினை கண்ணன் இயக்கி வருகிறார். இவர், ஏற்கெனவே ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை போன்ற படங்களை இயக்கியவர்.

இந்தப் படத்தில் நடிகர் சூரி தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் ஒரு கவர்ச்சிப்பாடலுக்கு நடனம் ஆடுவது போன்ற காட்சி உள்ளது. இந்த குத்தாட்டத்திற்கு புகழ்பெற்ற நடிகை ஒருவர் ஆடினால் நன்றாக இருக்கும் என நினைத்த கண்ணன், தயாரிப்பாளருடன் ஆலோசனை செய்து சன்னிலியோனை ஒப்பந்தம் செய்தார். இதற்காக நடிகைக்கு ரூ.35 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட உள்ளதாம்.

மேலும் பாடலுக்காக சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் தேசிய நெடுஞ்சாலை போன்ற செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சன்னிலியோன் நடனமாடும் இந்த குத்துப்பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் பிருந்தா நடனம் அமைக்கின்றார். படப்பிடிப்பை அடுத்த மாதம் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆக, விரைவில் சன்னி லியோன், நடிகர் சூரியுடன் கவர்ச்சி நடனமாட இருக்கிறார்.

SHARE