தொழிலாளர்கள் வன்முறையால் முடங்கிய பிரான்ஸ் – பிரித்தானிய போக்குவரத்து சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அகதிகள்? (வீடியோ இணைப்பு)

311

 

 

பிரான்ஸ் நாட்டின் எல்லையில் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இடையேயான சாலை மற்றும் ரயில் போக்குவரக்கு பாதிக்கப்பட்டுள்ளது.பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாட்டை இணைக்கும் கால்வாய் சுரங்கத்தை பராமரிப்பது மற்றும் போக்குவரத்து சேவையை வழங்குவது ஆகியவற்றை யூரோ டனல் நிறுவனம் கவனித்து வருகிறது.இதனிடையே அந்நிறுவனம் மைஃபெரிலிங்க் என்ற கப்பல் போக்குவரத்து நிறுவனத்துடனான தனது தொடர்பை முடித்துகொள்வதாக கடந்த மே மாதம் அறிவித்திருந்தது.

இதன் மூலம் மைஃபெரிலிங்க் நிறுவனத்தை சேர்ந்த 600க்கு மேற்பட்டவர்கள் தங்களது வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக துறைமுக நகரமான கலேவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் டையர்களை எரித்தும் கட்டைகளை போட்டும் சாலையை முடக்கினர். இதனால் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் இடையேயான சுரங்க போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் யூரோ டனல் நிறுவனத்தின் ரயில் சேவையும் இதனால் பாதிப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் தங்களது பயணத்தை தள்ளிவைக்கும்படி அந்நிறுவனத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே. இந்த ஆர்ப்பாட்டத்தால் சாலைகளில் பல மைல் தூரத்திற்கு வாகனங்கள் தேங்கின. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் செல்ல முயற்சி செய்த பலர் அங்கிருந்த லொறிகளிலும்,டிரக்குகளிலும் ஏற முயன்றனர்.

அவர்களை தடுக்கும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் லொறி டிரக் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் பின்பக்கம் உள்ள கதவுகளை நன்றாக அடைத்து வைக்கவேண்டும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

SHARE