விட்டாச்சு லீவு. தென் ஆப்பிரிக்காவில் அனுஷ்காவுடன் ஓய்வெடுக்கும் விராட் கோஹ்லி

337
ஜிம்பாப்வே தொடரில் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், அவர் தனது காதலி அனுஷ்கா சர்மாவுடன் தென் ஆப்பிரிக்காவில் ஓய்வெடுத்துக் கொண்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரபலமான கிரகர் தேசிய பூங்காவில் காதலியுடன் ஓய்வில் இருந்து வரும் கோஹ்லி இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப் படத்தை பதிவு செய்துள்ளார்.அதில், ‘சில்லிங் இன் தி வைல்ட். பீஸ்புல்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அப்படத்தில் அனுஷ்கா இல்லை.

ஆனால் அந்த ஹொட்டலின் தலைமை சமையல்காரர் அந்த படத்தை லைக் செய்து கமெண்ட் போட்டு கோஹ்லியுடன் அனுஷ்காவும் இருப்பதை காட்டிக் கொடுத்து விட்டார்.

ஜிம்பாப்வே தொடரில் டோனி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, தவான், அஸ்வின், உமேஷ் யாதவ் போன்றவர்களுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE