வயதான தாயை நாய் இருக்கும் இடத்தில் வைத்து பராமரித்த மகன்.

335
இந்
கர்நாடகாவில் வயதான தாயை அவரது மகன், நாயுடன் சேர்த்து வைத்து பராமரித்த சோக சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தேவம்மா (80), கடந்த ஓராண்டு காலமாக வீட்டின் முன்புறம் நாய் இருக்கும் இடத்தில் அதனுடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார்.இது குறித்த தகவலை அறிந்த தன்னார்வு தொண்டு அமைப்பினர் நேற்று அங்கு சென்றுள்ளனர்.அங்கு அவர் மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் நாய் இருக்கும் இடத்தில் குளிரில் நடுங்கி கொண்டிருந்துள்ளார்.

இதையடுத்து தன்னார்வு தொண்டு அமைப்பினர், நாயுடன் சேர்த்து அடைத்து வைக்கப்பட்ட மூதாட்டியை வெளியில் எடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது தொடர்பாக அவரது மகன் கூறுகையில், வயதாகிவிட்டதால், நிதானம் தவறி வீட்டிற்குள் மலம், சிறுநீர் கழித்து விடுகிறார்.

இதனால் வீட்டில் துர் நாற்றம் ஏற்படுவதால், வெளியில் நாய் உள்ள இடத்தில் விட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து மூதாட்டி கூறியதாக தொண்டு அமைப்பின் ஊழியர் கூறுகையில், மூதாட்டியின் கணவர் மூலம் கிடைத்த ரூ.1 லட்சத்தை அவரது மகன் பறித்துக்கொண்டு மூதாட்டியை வீட்டுக்குவெளியே நாயுடன் தங்க வைத்துள்ளார்.

வயதான காலத்தில் எங்கும் செல்ல முடியாமல், வேறு வழியின்றி அவரும் நாயுடன் வசித்து வந்துள்ளார்.

மேலும், நாய்க்கு தினமும் மூன்று வேளை சாப்பாடு கொடுத்த அவர்கள், எனக்கு பழைய சாப்பாட்டை ஓரு வேளை தான் கொடுத்ததாக மூதாட்டி வேதனையுடன் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

SHARE