இந்திய கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம்: போட்டி அட்டவணை அறிவிப்பு

356
இந்திய அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கவுள்ளது.இந்நிலையில் இந்திய அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை உறுதி செய்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், போட்டி அட்டவணையையும் அறிவித்துள்ளது.

இது பற்றி அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய செயல்மேலாண் இயக்குநர் மைக் மெக்கென்னா கூறுகையில், உலகக்கிண்ண அரையிறுதியில் இந்தியா- அவுஸ்திரேலியா மோதிய போட்டியை இந்தியாவில் 30 கோடி பேர் தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்து ரசித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து தான் இரு நாடுகளுக்கும் இடையே அதிக தொடர்களை நடத்த முடிவு செய்தோம் என்று தெரிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிக்கான அட்டவணை:-

1. ஜனவரி 12: முதல் ஒருநாள் போட்டி- பெர்த்

2. ஜனவரி 15: 2-வது ஒருநாள் போட்டி – பிரிஸ்பேன்

3. ஜனவரி 17: 3-வது ஒருநாள் போட்டி – மெல்போர்ன்

4. ஜனவரி 20: 4-வது ஒருநாள் போட்டி- கான்பெர்ரா

5. ஜனவரி 23: 5-வது ஒருநாள் போட்டி- சிட்னி

டி20 போட்டிக்கான அட்டவணை:-

1. ஜனவரி 26: முதல் டி20 போட்டி- அடிலெய்டு ஓவல்

2. ஜனவரி 29: 2-வது டி20 போடடி- மெல்போர்ன்

3. ஜனவரி 31: 3-வது டி20 போட்டி- சிட்னி

SHARE