விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் வெள்ளை உடை தங்களுக்கு தொல்லை தரும் விடயமாக இருக்கிறது என்று வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

332
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் வெள்ளை உடை தங்களுக்கு தொல்லை தரும் விடயமாக இருக்கிறது என்று வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.201507110205274109_WimbledonSania-Paes-pairsImprovement-in-the-final_SECVPFவிம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதில் விளையாடும் வீரர்கள் அணியும் உடைகள் வெள்ளை நிறத்தில் தான் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது.

உடை மட்டும் அல்ல உள்ளாடை, ஷூ, தலையில் கட்டும் பேண்ட் என எல்லாம் வெள்ளையாக தான் இருக்க வேண்டும். இதை மீறும் பட்சத்தில் வீரர், வீராங்கனைகளுக்கு அதற்கேற்ற தண்டனை கிடைக்கும்.

இந்த ஆண்டு விம்பிள்டன் போட்டியில் முதல் சுற்றில் கனடா வீராங்கனை பவுச்சர்டு கருப்பு நிறத்தில் பிரா அணிந்து நடுவர் லூசியேவிடம் சிக்கினார்.

பின்னர் பெரியளவில் இது விதிமீறல் இல்லை என்று அவர் மீண்டும் விளையாட அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் வெள்ளை தான் அணியை வேண்டும் என்ற விதிமுறைக்கு பல வீரர், வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் பெடரர் கூறுகையில், இது எல்லாம் கேலிக் கூத்தாக இருக்கிறது. இவை கடுமையான விதிமுறைகளாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

டென்மாக்கின் வோஸ்னியாக்கி இது பற்றி கூறுகையில், பொதுவாக அனைவரும் லேசான நிறம் கொண்ட ஆடைகளுடன் ஆடத்தான் விரும்புவார்கள். ஆனால் இது வேடிக்கையாக உள்ளது என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்காவின் பெதானியே தெரிவிக்கையில், எனது ஷு போன்றவற்றை கழுவவே பயமாக இருக்கிறது. அதில் உள்ள வெள்ளை நிறம் போய் விட்டால் என்ன செய்வது. இது எல்லாம் கடுமையான விதி என்று தெரிவித்துள்ளார்.

SHARE