பிறந்த நாளை முன்னிட்டு சிரியா பெண்களுக்காக பள்ளி தொடங்கிய மலாலா (வீடியோ இணைப்பு)

433
பெண் கல்விக்காக போராடி வரும் மலாலா தனது பிறந்த நாளை முன்னிட்டு சிரியா பெண்களுக்காக பள்ளியை தொடங்கியுள்ளார்.பாகிஸ்தானை சேர்ந்தவர் மலாலா யூசப்சாய், பெண் கல்விக்காக போராடி வரும் இவர் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலத்த காயமடைந்தார்.பின்னர் பிரித்தானியாவில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். தொடர்ந்து பெண் கல்விக்காக குரல் கொடுத்துவரும் இவர் கடந்த 2014ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.

இந்நிலையில் தனது 18வது பிறந்த நாளையொட்டி ‘மலாலா பண்ட்’ என்ற  தொண்டு நிறுவனம் மூலமாக சிரியாவின் எல்லைப் பகுதியில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கில் ஒரு பள்ளியைத் தொடங்கியுள்ளார்.

இதில் 14 முதல் 18 வயதிற்குட்பட்ட 200 பெண் குழந்தைகள் படிக்கவுள்ளனர். இது தொடர்பாக அவர் கூறியதாவது, சிரிய அகதிகளின் குரல் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

எனினும் இதுவரை அது கவனிக்கப்படாமலேயே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் உலக நாடுகளின் தலைவர்கள் ஆயுதங்களில் முதலீடு செய்வதற்கு பதில் புத்தகங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

SHARE