அனைவருக்கும் DNA பரிசோதனை….மறுத்தால் சிறைதண்டனை: குவைத் அதிரடி அறிவிப்பு (வீடியோ இணைப்பு)

320
குவைத் நாட்டில் வசிக்கும் அனைவரையும் DNA பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும் எனும் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இதன்படி அந்நாட்டு பிரஜைகளான 1.3 மில்லியன் மக்களுக்கும், வெளிநாட்டவர்களாக அங்கு இருக்கும் 2.9 மில்லியன் பேருக்கும் DNA பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவை தொடர்பான தரவுகள் தேசிய தரவுத்தளத்தில் (National Database) பதிவு செய்யப்படவுள்ளன.இப்பரிசோதனை செய்யாதவர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை மற்றும் 33,000 அமெரிக்க டொலர்கள் அபராதமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை போலியான DNA தகவல்களை வழங்குபவர்களுக்கு 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டமானது கடந்த யூன் மாதம் 26 ஆம் திகதி குவைத் நகரில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பின்னர் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த யூன் மாதம் 26ம் திகதி குவைத் மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதுடன், 227 பேர் படுகாயமுற்றனர்.

இந்த அசம்பாவிதத்தை தொடர்ந்து குவைத்தில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களின் தகவல்களை சேகரிக்கும் பொருட்டு இந்த புதிய சட்டத்தை அரசு இயற்றியுள்ளது.

சர்வதேச அளவில், ஒட்டுமொத்த குடிமக்களையும் மரபணு சோதனைக்கு உட்படுத்தும் முதல் நாடு குவைத் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE