சோதனையில் டோனி: எந்த அணியில் கரை சேரப்போகிறார்?

301
ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.கடந்த 2008 ஆம் ஆண்டில் பிரிமியர் தொடர் துவங்கப்பட்டது முதல் சென்னை அணியின் அணித்தலைவராக இருப்பவர் டோனி.இதுவரை நடந்த 8 பிரிமியர் தொடரில் 2010, 2011ல் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்துள்ளார்.கடந்த 2008, 2012, 2013, 2015 ஆம் ஆண்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேற காரணமாக இருந்தார்.

இந்நிலையில், சூதாட்ட விடயத்தில் டோனியின் பெயரும் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது அடிபட்டன.

தற்போது சென்னை அணிக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்ட நிலையில் டோனி வேறு அணிக்காக விளையாடுவாரா அல்லது இந்த அணியில் நீடிப்பாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஐ.பி.எல். போட்டியில் டோனி போன்ற முன்னணி வீரர்கள் விளையாட முடியாமல் போனால் அது தொடருக்கே பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி விடும் என்பதால், இது தொடர்பான முடிவை எடுக்கு பொறுப்பை டோனியிடமே சென்னை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில் இனிவரும் இரண்டு ஐ.பி.எல் போட்டியில் எத்தனை அணிகள் விளையாடும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டதால் 6 அணிகள் விளையாடுமா? அல்லது 2 புதிய அணிகளை சேர்த்து வழக்கம் போல் 8 அணிகளை வைத்து விளையாட திட்டமா? என்பது பற்றி தெரியவில்லை.

வருகிற 19 ஆம் திகதி நடைபெறும் ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழுவில் இதுபற்றி முடிவு செய்யப்படும்.

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை முன்னாள் அணித்தலைவர்களான கவாஸ்கர், கங்குலி, டிராவிட் ஆகியோரை வைத்து இயக்குவது பற்றி கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

SHARE