இந்தியா- இலங்கை டெஸ்ட் தொடரில் பட்டையை கிளப்பிய வீரர்கள்

343
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரே அதிக ஓட்டங்களை குவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் கோஹ்லி தலைமையில் இந்திய அணி இலங்கையை சந்திக்கிறது.இந்தத் தொடரோடு இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதால் அவரை சிறப்பாக வழியனுப்பி வைக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்நிலையில் இலங்கை- இந்திய டெஸ்ட் தொடரில் பட்டையை கிளப்பிய 5 வீரர்களை பற்றி பார்க்கலாம்.

சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தான் இவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்தவராக இருக்கிறார்.

இவர் 36 இன்னிங்ஸிகளில் விளையாடி 60.45 சராசரியுடன் 1995 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 9 சதங்கள் அடித்துள்ளார். இவரது அதிகபட்ச ஓட்டங்கள் 203 ஆகும்.

மஹலே ஜெயவர்த்தனே

இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரான ஜெயவர்த்தனே 1822 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

28 இன்னிஸ்களில் விளையாடியுள்ள ஜெயவர்த்தனே 67.48 சராசரி வைத்துள்ளார். 6 சதங்களை விளாசியுள்ளார். இவரது அதிகப்பட்ட ஓட்டங்கள் 275 ஆகும்.

ராகுல் டிராவிட்

இந்திய கிரிக்கெட் அணியின் “தடுப்பு சுவர்” என்று வர்ணிக்கப்படும் டிராவிட் 32 இன்னிங்ஸ்களில் விளையாடி 1508 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 3 சதத்துடன் 177 ஓட்டங்களை அதிகபட்சமாக வைத்துள்ளார்.

குமார் சங்கக்காரா

இலங்கை அணியின் மற்றொரு நட்சத்திர துடுப்பாட்டக்காரரான சங்கக்காரா 24 இன்னிங்ஸிகளில் 1257 ஓட்டங்கள் பெற்றுள்ளார். 5 சதங்கள் விளாசிய இவரின் அதிகபட்ச ஓட்டங்கள் 219 ஆகும்.

அரவிந்த டி சில்வா

இலங்கை அணியின் முன்னாள் வீரரான அரவிந்த டி சில்வா 32 இன்னிங்ஸ்களில் 1252 ஓட்டங்களை எடுத்துள்ளார். 5 சதங்கள் எடுத்துள்ள இவரின் அதிகபட்ச ஓட்டங்கள் 148 ஆகும்.

SHARE