மக்கள் தொகையில் 2022-ல் சீனாவை முந்தும் இந்தியா : ஐ.நா.ஆய்வில் தகவல்

317

நியூயார்க்: மக்கள் தொகையில் உலகில் தற்போது முதலிடத்தில் உள்ள சீனாவை, வரும் 2022 ஆம் ஆண்டு இந்தியா முந்தும் என்று ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகில் அதிக மக்கள் வசிக்கும் நாடுகள் பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அந்நாட்டில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த குறைக்க ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் கட்டாயமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2015 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை பெருக்கம் தொடர்பான ஆய்வறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. அதில் சுமார் 1.38 பில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனா தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. 1.31  பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

மேலும் இந்த ஆய்வில் 2022ம் ஆண்டுக்கு பின்பு இந்தியாவின் மக்கள் தொகை உயர்ந்து 2030ம் ஆண்டில் 1.5 பில்லியனாகவும், 2050-ல்1.7 பில்லியனாகவும் அதிகரிக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 2022 ஆம் ஆண்டுக்கு பின் உலகிலேயே அதிக மக்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிக்கும் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

SHARE