ஐ.எஸ். தீவிரவாதிகளை ஏமாற்றிய செசன்யா பெண்கள்: ரூ. 2 லட்சம் சுருட்டியது அம்பலம் (வீடியோ இணைப்பு)

434
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிடம் இருந்து ரஷ்யாவின் செசன்யா பகுதி பெண்கள் 3 ஆயிரத்து 300 டொலர்களை ஏமாற்றிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தங்கள் அமைப்பிற்கு ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஆள்தேர்வு முகாம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் செசன்யா பகுதி பெண்கள் 3 பேர் இந்த வலைத்தளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து அந்த அமைப்பில் சேர்ந்து சண்டையிட விருப்பம் தெரிவித்தனர்.

ஆனால் தங்களிடம் போதிய பணம் இல்லை என்று தெரிவித்த அவர்கள், பண உதவி கிடைத்தால் சிரியாவுக்கு வர தயார் எனவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஐ.எஸ்.தீவிரவாதிகள் ரகசிய ஓன்லைன் பண பகிர்வு மூலம் இந்த மூன்று பெண்களுக்கும் 3 ஆயிரத்து 300 அமெரிக்க டொலர்கள் விமான கட்டணமாக அனுப்பி வைத்துள்ளனர்.

பணத்தை பெற்றுக்கொண்ட அந்த 3 பெண்களும் தங்களது சமூக வலைத்தளப்பக்கத்தை முடக்கி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

முறைகேடான பணப்பரிமாற்றத்தை கண்காணித்து வந்த பொலிசார் மூலம் இந்த தகவல் வெளியாகி ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

SHARE