விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்

522
விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் அல்லது, இந்தியாவில் இடம்பெற்ற குற்றங்களில் அவரது தொடர்புகள் குறித்து விசாரிப்பதற்காக இந்தியாவிடம் கையளிக்க வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்து.பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து உரையாற்றிய போதே ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

ஆயுதப் படையினர் மற்றும் பொலிஸார் உட்பட 78,100 பேருடைய கொலைகளுக்குப் பொறுப்பாகவுள்ள கே.பி.யை அனைத்து வசதிகளையும் கொடுத்துப் பராமரிப்பதற்குப் பதிலாக அவரை அரசாங்கம் விசாரணைக்கு உள்ளாக்க வேண்டும் எனவும் ரவி கருணாநாயக்க வலியுறுத்தினார்.

விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவுகளுக்குப் பொறுப்பாகவிருந்த கே.பி. போர் முடிவுக்கு வந்த பின்னர் 2009 ஆகஸ்ட் மாதத்தில் மலேஷியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார்.

‘அரசாங்கம் இன்று கே.பி.யை பேணிப் பாதுகாத்து வருகின்றது. கே.பி.யிடமிருந்த 19 கப்பல்களைப் பறிமுதல் செய்திருப்பதாக அரசாங்கம் சொல்லிக்கொள்கின்றது. அந்தக் கப்பல்களுக்கு இப்போது என்ன நடந்தது?’ எனவும் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பினார்.

kp_130887f photos 2013 2

SHARE